சென்னையை விட்டு வெளியேறும் மக்கள் – பலத்த மழைக்கு வாய்ப்பு

0
143

மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லுனுவில பண்டிரிப்வ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கல்லூரியின் தரம் 04 வகுப்பறையில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்களை முத்தமிட்டதன் பின்னர், தனது கையடக்கத் தொலைபேசியில் சில ஆபாச காணொளிகளை பிள்ளைகளுக்குக் காட்டியதாக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here