2024 ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை

0
246

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பில் அறித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2 ஆம் தவணை
இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 3 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here