புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமையினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்_ மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரிவிப்பு

0
231

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்றாகும். இதில் எமது நாட்டுக்கு அந்நியச் செலவாணியினை கொண்டு வருகின்ற தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் குறிப்பாக அவர்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமையினை அரசாங்கம் இந்த சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரிவித்தார்.
எமது நாட்டின் இனங்களிடையே ஒற்றுமை, சகவாழ,; சமத்துவம் ஏற்படுத்தும் நோக்கில் பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் மொழி சிங்களம் பாடநெறி நுவரெலியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது அந்த பாட நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும்,மாண்புமிகு மலையகம் மன்னார் தொடக்கம் மாத்தளை வரை நடைபயணம் மேற்கொண்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (17) திகதி பொகவந்தலாவை தண்டாயுதபாணி மண்டபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ….நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று நுவரெலியா மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளளனர். இன்னும் பலர் செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர் இன்று உள்ள பொருளாதார நிலையில் பாரிய அளவில் செலவு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது ஆகவே நுவரெலியா மாவட்டத்தில் ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஒன்றினை ஏற்படுத்தப்பட வேண்டும் அதே நேரம் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் வெளிநாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சபையில் தீர்மானங்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு உறுப்பினர் ஒருவருக்கு பிரதிநதிதுவம் வழங்கப்பட வேண்டும். என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்;.

இதன் போது இதில் கலந்து கொண்ட பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மொழி பாடநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஆர்.ஜோக்கிம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு அரச அலுவலர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் பொது மக்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here