அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான புதிய சுற்றறிக்கை

0
118

வணிக நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் வரி அறவீட்டினால் கிடைக்கப்பெற்ற இலாபத்தில் 30 சதவீதத்தை கூட்டு நிதியத்திற்கு செலுத்திய நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் என குறித்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலாபம் ஈட்டாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here