வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி

0
132

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரத்தில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என காவல் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாகவே, இவ்வாறான மோசடிகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது.இதுகுறித்து, காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2 வார கால பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here