பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாக பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்களும் அதிகரிக்கின்றன. எரிபொருள் விலையும் அதிகரிக்கும் என்று ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களும், அத்தியாவசிய பொருட்கள் பலவும் விலைகள் அதிகரிக்கவுள்ளன.
இந்தநிலையில் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் என்று இலங்கை நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.ஜனவரி முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணமானது 3சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




