VAT வரியை அதிகரிக்கும் நடவடிக்கைகளால் பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 31 ரூபாயில் இருந்து 35 ரூபாவாகவும் ஏனைய பஸ் கட்டணங்கள் 20 தொடக்கம் 25 வீதமாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
VAT அதிகரிப்பின் காரணமாக பேருந்துகளின் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் திரு.பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், VAT அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருளின் விலை அதிகரிக்கும் எனவும், பஸ் தொழிற்துறையை தக்கவைக்க அரசாங்கத்திடம் நிவாரணம் பெற்றுக் கொள்வதை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
தேசிய ஒற்றை கடமை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் படி, இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்படும்