இலங்கை கிரிகெட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தாமதமாகும்

0
114

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும் என தெரிவித்துள்ளது.

ICCயின் பணிப்பாளர் மற்றும் இலங்கை கிரிகெட் சபையுடனான அடுத்த கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகவும், அக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தடையை நீக்குவதற்காக தற்போது இலங்கை வந்துள்ள ICC பிரதானி, Jeff Allardyce, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ள போதிலும், தடை தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தடை காரணமாக, இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பெற்றுக் கொள்வது மேலும் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here