வயதான அத்தையை மிரட்டி வன்புணர்வு புரிந்தவர் கைது

0
139

நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனைப் பராமரித்து வந்த வயோதிபப் பெண்ணான தனது அத்தையை வன்புணர்வு புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகாத பாதிக்கப்பட்ட பெண், சுமார் இரண்டு ஆண்டுகளாக கொலை மிரட்டலின் கீழ் வன்புணர்வு செய்யப்பட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதுடன், இன்று கெகிராவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கெக்கிராவ காவல் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here