நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்.

0
117

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

குறித்த மிதக்கும் சடலம் இராமன் பத்மநாதன் வயது (64) என்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

May be an image of kayak

வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வி. தீபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here