நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருகடியினை தொடர்ந்து பெருந்தோட்ட பகுதியில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கற்றல் உபகரணங்களின் விலையேற்றம் காரணமாக மலையக பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இடை விலகி வருகின்றனர் அத்தோடு வறுமை காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலும் தயக்கம் காட்டி வருவதனால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட பார்கேபல் தமிழ் வித்தியத்தில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தக்பை,கொப்பிகள்,பென்சில் இறப்பர்,தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டுப்பெட்டிகள் உட்பட சுமார் ஒரு மாணவருக்கு 8000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் சேமிப்பினை ஊக்குவிக்க ஒவ்வொரு மாணவருக்கும் 100 இட்டு ஒரு உண்டியலும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இன்று (13) திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டன.
குறித்த பாடசாலையில் கல்வி கற்று தற்போது கொழும்பில் பணிபுரியும் பழைய மாணவர்களான ஆர்.நாராயணசாமி சங்கர்,மற்றும் எஸ்.வீரய்யா ரவி, என்பவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் திருமதி ஜி. ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முன்னாள் பாடசாலை அதிபர் சுகுமார், மற்றும் அயல் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்