மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

0
197

தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

விலை குறைப்பு மட்டுமே
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கி விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் விலை அதிகரிப்பு இருக்காது எனவும், விலை குறைப்பு மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here