அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

0
165

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன வெளியிட்டுள்ளார்.

ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.எனினும், அஸ்வெசும கொடுப்பனவுக்கான முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here