பேக்கரிகளுக்கு பூட்டு? : மார்ச் முதல் அமுலாகவுள்ள வர்த்தமானி அறிவிப்பு!

0
152

அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT வரி காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு, முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் நுகர்வோர் பேக்கரி பொருட்களின் பாவனையிலிருந்து விலகியமை போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை பின்னடைவை சந்தித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே.குணவர்தன தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாணுக்கான வர்த்தமானியின் பிரகாரம், தேவையான எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத 453 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு பாணின் எடை 450 கிராம் எனவும், அதிகபட்சமாக 13.05 கிராம் எடையைக் குறைக்க வேண்டும் எனவும் அதிகாரசபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அரை இறாத்தல் பாணின் எடை 225 கிராம் என்றும், குறைக்கக்கூடிய அதிகபட்ச எடை 09 கிராம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் பல பேக்கரி கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தேவையான எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத 453 பேக்கரிகள் மற்றும் கடைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டறிந்துள்ளது.

அந்த பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி எண்ணான 1977க்கு தொடர்பு கொண்டு தமக்கு அறிவிக்கலாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை, பாண் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதுளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிதி அமைச்சகம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள், குழந்தைகளுக்கான உயர் புரதம் கொண்ட விவசாய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான VAT வரி விலக்கை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்க நிதிக் குழு நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here