ஜனநாயனத்திற்கான இளைஞர்களின் குரல் எனும் தொனிப்பொருளில் குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை கல்வி தொடர்பாக மலையகப்பகுதியில் பயிற்சி பெற்று பெற்ற பயிற்சியின்; அடிப்படையில் மலையக மக்களை தெளிவூட்டி உரிமைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரச நிறுவனங்களில் சேவைகள் பெற்றுக்கொள்வது பெருந்தோட்ட மக்களுக்கு உதவிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த செயத்திட்டத்திற்கு உதவி புரிந்த அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளை கெரவிக்கும் நிகழ்வும் நேற்று (02) கொட்டகலை பகுதியில் இடம்பெற்றது.
பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை தொடர்பாக பயிற்சி பெற்று செயப்பட்டு வரும் 50 இளைஞர் யுவதிகளுக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது உரிமைகள் தொடர்பாகவும் தாங்கள் எதிர்நோக்கும் பிரிச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் காட்டூள் கானொளிகளும் மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தம் அரசியல் தொடர்பான மேடை நாடகமும் இடம்பெற்றன.
இதன் போது ஜனநாயகத்திற்கான இளைஞர்களின் சின்னமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐ.ஆர்.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயபிரகாஸ் ஜெகன்,ஐடியா நிறுவனத்தின் பணிப்பாளர் கௌத்தமன்,ஐஎஸ்டி நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் தனராஜ் இந்நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் சரண்யா மாரிமுத்து பிரதேச இணைப்பாளர்கள் அரச திணைக்களங்களின் அலுவலர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்