பெண்களின் உரிமை வென்றெடுக்க ஹட்டனில் நடை பவனி 35 ஆயிரம் கையொப்பங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு.

0
117

பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த நடைபவனியும் 25 ஆயிரம் கையொப்பங்களை திரட்டி ஜனாதிபதிக்கு அனுப்பும் நிகழ்வும் நேற்று 09.03.3034 மாலை ஹட்டனில் நடைபெற்றது.
‘பெண்களின் உரிமையை வென்றெடுப்போம,; உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்போம், பெண்களையும் தாயாக மதிப்போம், பெண்களின் சுகாதாரத்தை மேன்மைப்படுத்துவோம,; பெண்கள் எமது நாட்டின் கண்கள் ,; எமது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்றவர்கள் பெண்கள்,எனும் வசனங்களை எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம் ஊர்வலம் ஹட்டன் பொவிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் திருச்சிலுவை ஆலயம் வரை சென்றடைந்து அங்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

பெருந்தோட்டப்பகுதியில் வாழும் பெண்கள் காலையில் தொழிலுக்கு சென்றால் மாலை வரை விடாமல் தொழில் செய்து குடும்பத்தையும் சரி நாட்டையும் சரி சமூகத்தையும் சரி உயர்த்துகின்றவர்களாகவே எமது பெண்கள் இருக்கின்றார்கள் எனவே விஷேடவிதமாக இம்மாதம் மகளிருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற மாதம்; என்றபடியால் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்கின்ற ஒரு சிறப்பு வேலை திட்டமாக இந்த வேலை திட்டம் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட இணைப்பாளரும் ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கு தந்தை நியுமன் பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் சட்டத்தரணி லலிதாம்பிகை சிவில் சமூக அமைப்பு அங்கத்தவர்கள் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரி திருமதி குமாரி மற்றும் தோற்றங்களிலே வேலை செய்கின்ற பெண்கள் உட்பட சுமார் 250 பேர் பங்கு பற்றிய இருந்தனர் .

அதனை தொடர்ந்;து வருகை தந்தவர்களிடம் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. வௌ;வேறு பிரதேசங்களிலும் வருகை தந்த பெண் தலைமைத்துவ தலைவர்கள் தோட்டங்களுக்கு சென்று அனைவரிடமும் கையொப்பம் சேகரித்து நுவரெலியா மாவட்டத்திலே 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட கையொப்பங்களை தயார் செய்து ஜனாதிபதி அதைப்போல தொழில் அமைச்சர் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரிகளுக்கு கையொப்பங்களை அனுப்பி பெண்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இந்நிகழ்ச்சி திட்டத்தை கரிதாஸ் செட்டிக் நிறுவனத்தின் பெருந்தோட்ட பிரிவு இணைப்பாளர் திரு எஸ் நிக்கலஸ் உட்பட உத்தியோகத்தர்கள் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமையும்; குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here