வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், அமைதி தூதுவரும்,ஆன்மீக குருவுமாக இருந்து மன அழுத்தமற்ற,வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென உலகில் கோடிகணக்கான மக்களை தன் சேவையில் இணைத்து செயற்படும் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தன்று வருகைத்தரவுள்ளார்.
அதற்கான அழைப்பிதழை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,சீதையம்மன் ஆலய அரங்காவலர் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்