இணையவழி மூலம் தொடருந்து பயணம்! இன்று முதல் நடைமுறை

0
133

தொடருந்து ஆசனங்களை இன்று(14) முதல் முழுவதுமாக இணையவழி முன்பதிவு செய்யலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் தொடருந்து ஆசனங்களை இணையவழி மூலமாக முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே இணையவழி மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக இணையவழி மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்துவிட்டு பயணிகள் தொடருந்து நிலையத்திற்கு வந்து பயணச்சீட்டி பெற வேண்டிய நிலை இதுவரை இருந்த போதிலும் இனி முதல் ஆசன முன்பதிவு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர அரசு ஊழியர்களுக்கான இலவச அனுமதிப்பத்திரத்தையும் இணையவழி மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லையெனவும் அவ்வாறு பணம் வசூலிக்கப்படும் என்ற வதந்தி பொய்யானதெனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் “துன்ஹிந்த ஒடிஸி” என்ற புதிய தொடருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான தொடருந்து, சேவையில் சேர்க்கப்படவுள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், “எல்ல ஒடிஸி” மற்றும் “சீதாவக்க ஒடிஸி” என்ற பெயரில் இரண்டு தொடருந்துகளை தொடருந்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here