வெய்யில் காலத்தில் தலையில் ஏற்படும் பொடுகு! இதை மட்டும் செய்தாலே போதும் உடனடிபலன்

0
113

பெண்கள் அனைவருக்கும் ஆண்களை விட பொடுகு தொல்லை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி வருகிறது.

இந்த பிரச்சனையால் நாம் வெளியில் செல்லும் போது தர்மசங்கடத்தை உண்டாக்க கூடும். இந்த பிரச்சனைகளை வீட்டு வைத்தியத்தின் மூலம் மிகவும் எளிதாக போக்க முடியும் அதை எப்படி போக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக பொடுகுத்தொல்லை வரும் காரணத்தை கண்டறிய வேண்டும்.மன அழுத்தம் வறண்ட சருமம் ஹார்மோன் மாறுபாடு ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் தலையை சுத்தமாக பராமரிக்காதது போன்றவைகள் இந்த பொடுகு பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதை தவிர நாம் பயன்படுத்தும் ஷம்புக்களும் இதற்கான காரணம் என கூற முடியும்.இந்த பொடுகை நீக்க பாலுடன் சிறிதளவு மிளகுப்பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தலை குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும்.

சின்ன வெங்காயம் எடுத்து மிக்ஸியில் அரைத்து இதை 15 நிமிடம் தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை விட்டு போகும்.வாரம் ஒரு முறையாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது உங்கள் உடல் சூட்டை கட்டுப்படுத்தி பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here