கட்டுநாயக்கவைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு..!

0
136

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.

அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தடைக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழையும் ஜேர்மன் கப்பல்: கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா தடைக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழையும் ஜேர்மன் கப்பல்: கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா

இதேவேளை இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்ததாகவும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் கல்கட்டிய சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here