பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாரிய அதிகரிப்பு செய்யப்பட்ட பொருட்களில் மொபைல் போன்களும் ஒன்றாகும் .அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர் .
இலங்கையில் அதிக விலை கொண்ட ஐபோன் புரோ மெக்ஸ் ரூபா 530,000 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ,
தற்போது ரூபா 375,000 க்கு பாவனையாளர்களுக்கு கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது .
மேலும் ரூபா 10,000 விற்பனை செய்யப்பட்ட சாதாரண கையடக்கத் தொலைபேசியை தற்போது 7000 ரூபாவிற்கு சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் .