வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்த வந்த நபர் ஒருவர் அங்குலான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 02 முச்சக்கர வண்டிகள், 02 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.