கினிகத்தேனையில் பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

0
94

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்குச் செல்லவில்லை என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கினிகத்தேன, அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தான பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவிகள் பார்த்துள்ளனர்.

காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here