பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0
173

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிள ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்களின் பட்டப் படிப்பினை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்த பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி குறித்த வழிகாட்டல் கையேடு வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here