யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (17) சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் நேற்று முன் தினம் (15) மதியம் குறிப்பிட்ட நபர் ஒருவர் மாட்டிறைச்சி துண்டு வாங்கியுள்ளார்.ஆனால் அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏராளமான ரோமங்களுடன் இறைச்சித் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக குறித்த நபர் உடனடியாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த நிலையிலும் அன்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக குறித்த நபர் கடையில் உணவு வாங்கியதற்கான பற்றுச்சீட்டு மற்றும் இறைச்சி அடங்கிய புகைப்படம் தெல்லிப்பளை வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்பின், தரமற்ற இறைச்சி வழங்குவது குறித்தும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.குறித்த உணவகத்தை நேற்று (17ம் திகதி) ஆய்வு செய்த பொது சுகாதார பரிசோதகர்கள் உண்பதற்கு தகுதியற்ற இறைச்சி வகைகளை கண்டெடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவை அழுக்காக வைத்திருப்பது, இறைச்சியை வெட்டுவதற்கு இறைச்சி கொள்முதல் செய்வதற்கான பற்றுச்சீட்டு இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
பின்னர் குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 65,000 ரூபா அபராதத்துடன் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.