நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது இந்த மலையுடன் நிலவி வரும் கடும் காற்று காரணமாக அடிக்கடி மரங்கள் முறிந்து வீழ்ந்து புகையிரத சேவைகள் தடைப்படுகின்றன.
இதனால் இரவு நேரங்களிலும் கடும் காற்று வீசி வருவதனால் பயணிகளின் நன்மை கருதி இரவு புகையிரத சேவைகளை இரத்துச்செய்துள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக இன்று 24 ம் திகதி இரண்டு பயணிகள் புகையிரத சேவைகளும், வெசாக்கு மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த புகையிரத சேவைகளுமாக நான்கு புகையிரதங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
இதே நேரம் மரம் முறிவு மற்றும் மண் திட்டுக்கள் சரிவு சமிஞ்ஞை கோளாறு உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக புகையிரதங்கள் உரிய நேரத்திற்கு இன்றும் வரவில்லை காலம் தாழ்த்தியே புகையிரத சேவைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் புகையிரத பயணிகளும் மிக குறைவாகவே காணப்பட்டன.
மலைவாஞ்ஞன்