இவ்வருடம் 20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இதுவரை வெளிப்படுத்திய ஆட்டத்திறனைப் பார்த்து திருப்தி அடைய முடியாது என இலங்கை அணியின் வீரர் மகிஷ் தீக்ஷன தெரிவித்துள்ளார்.
நேபாளத்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.போட்டிக்கு வரும்போது நல்ல மனநிலை இருந்தது. எங்கள் பந்துவீச்சு நன்றாக இருந்தது. முந்திய கடந்த மூன்று போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்..
நாங்கள் போட்டிக்கு வரும்போதும் மிகவும் முன்னிலையில் இருந்தோம்.ஆனால் ஒரு அணியாக பல தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.
அதனால்தான் சூப்பர் 8க்கு செல்ல முடியவில்லை.எங்கள் பேட்டிங்கில் என்ன நடந்தது என்பதுதான் பெரிய விஷயம்.
ஆடுகள நிலைமைகளுக்கு ஏற்ப நாம் மாறாதது மிகப்பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன்.