வீதியில் சென்ற மாணவிக்கு திடீரென முத்தம் கொடுத்த நபர்!

0
85

வீதியில் சென்ற 14 வயது பாடசாலை மாணவியை இறுக கட்டியணைத்து முகத்தில் முத்தமிட்ட 23 வயது குடும்பஸ்தர் இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான ஆறு குற்றங்கள் இருப்பதாக இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் தெரிவித்தனர்.வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர், சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

இதனால் திகைப்படைந்த சிறுமி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்ததை தனது தாயிடம் கூறியதை அடுத்து தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தை பொலிசாரிடம் முறையிட்டதால் சந்தேகநபர் சிறுமியின் தாயையும் தாக்கியதுடன், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை தாக்கி பல கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட சிறுமி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here