குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோகிராம் அரிசியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கலென்பிடுனுவெவ பிரதேசத்தில் (14) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அரிசி தொகையை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 64 வயதுடைய மனம்பிட்டிய, வீரபுர பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த அரிசி லொறியை கலென்பிடுனுவெவ பிரதேச செயலக அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது, அரிசியை விநியோகிப்பதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிக்குமாறு பிரதேச செயலாளர் கலென்பிடுனுவெவ வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணையை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.