வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி சட்டமியற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் ப்ரொடெப் தொழிற்சங்கம் எச்சரிக்கை.

0
92

இலங்கையின் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உரையாற்றும் போது வீட்டு வேலை தொழிலாளர் சாசனத்தினை அமுல்படுத்துவதாக தெரிவித்துள்ளார.; அதே நேரம் எம்முடன் கலந்துரையாடும் போதும் வீட்டு வேலை தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்களை கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் வாக்குறுதியாக அல்லாது இலங்கை பாராளுமன்றத்தில் வீட்டு வேலை தொழிலாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் சட்டங்களை உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இலங்கையில் 87 ஆயிரத்திற்கும் அதிகமான வீட்டு வேலை தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டி நேரிடும் என ப்ரொடெப் தொழிற்சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினம் இன்றாகும.; இதனை முன்னிட்டு ஹட்டனில் இன்று 16 ம் திகதி ஒழுங்கு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இலங்கையிலும் சரி வெளிநாட்டிலும் வீட்டு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.

பலர் வீட்டு வேவைக்கு சென்று இறந்து உள்ளனர் மலையத்திலும் இது விதிவிலக்கல்ல பல பெண்கள் இறந்துளள்hர்கள் இதனால் இவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் இன்று அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது இது தேர்தல் காலம் என்பதால் போலி வாக்குறுதிகளை தந்து விட்டு எம்மை ஏமாற்ற நினைக்க கூடாது இலங்கையில் இன்று வீட்டு வேலை தொழிலில் 87 லட்டசத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர் அதில் அதிகமானவர்கள் எமது தொழிற்சங்கத்திலேயே இருக்கின்றனர்.

ஆகவே பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற வகையில் நாம் அமைதியாக இருந்து விட முடியாது அரசாங்கம் தொழில் அமைச்சரும் வாக்குறுதி வழங்கியதை போல் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வரப்பட வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.இதன் இதன் செயலாளர் கிசாந்தி அவர்களும் கருத்து தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here