பத்தவெளயில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 09 பேர் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஹோட்டல் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.