நீர் தொட்டியில் விழுந்து மூன்றே வயதான குழந்தை பலி

0
71

மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கிழக்கு மித்தெனிய முகவரில் வசித்து வந்த சமரகோன் முதியன்சே என்பவரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையினதும் உடலை கழுவி விடுவதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவரது ஒன்பது வயது குழந்தையின் உடலைக் கழுவி வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் இருந்தி விட்டு சென்றுள்ளார்.அதனை தொடர்ந்து, மீண்டும் வீட்டிலிருந்து வெளியே வந்த தாய் மூன்று வயது குழந்தையை தேடிய போது குழந்தை நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தை மீட்கப்பட்டு மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பான விசாரணைகளை மித்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here