யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன்போது, பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று இரவில் இருந்து வைத்தியசாலையின் முன்பாக பதற்ற நிலைமை நிலவி வந்தது. வைத்தியர் அர்சுனா ராமநாதனை கைது செய்யும் நோக்கில் பெருந்தொகை பொலிஸார் அங்கு கூடியிருந்தனர்.வைத்தியரை கைது செய்வதற்கான பிடியாணையினை சாவகச்சேரி பொலிஸார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.