கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞனை, கும்பல் ஒன்று தாக்கி நகை, பணம், கைத்தொலைபேசி, முச்சக்கரவண்டி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த இளைஞன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து உரும்பிராய்க்கு முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது வழியில் மற்றொரு முச்சக்கரவண்டியில் வந்த கும்பல் வழியை மறித்து வாளால் தாக்கி கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
வாள்வெட்டு தாக்குதலின் பின்னர் தாம் மயங்கி விழுந்ததாகவும், சுயநினைவு திரும்பும் போது, தான் வாடகை அடிப்படையில் எடுத்து வந்த முச்சக்கரவண்டியும் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் .
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .