தலதா மாளிகையை சுற்றிய ட்ரோன் – புகைப்படக் கலைஞர் அதிரடிக் கைது

0
71

கண்டியில் நடைபெற்ற இறுதி ரந்தோலி பெரஹரவை ஆளில்லா ட்ரோன் கருவி மூலம் புகைப்படம் எடுத்ததற்காக ரசங்க திஸாநாயக்க என்ற திருமண புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்ததைக் கண்டறிந்த இலங்கை விமானப்படை வீரர்கள், அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதுடன், அதன் உரிமையாளரான புகைப்பட கலைஞரையும் கைது செய்தனர்.

தலதா மாளிகைக்கு மேலே அனுமதியின்றி ட்ரோன் கருவிகளை பயன்படுத்துவது ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ரந்தோலி பெரஹெராவின் மூன்றாவது நாளிலும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here