தேர்தலில் வெற்றியடைந்தால் ஐ.எம்.எப். உடன்படிக்கையில் மாற்றத்தை மேற்கொள்வேன்

0
44

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இப்போது கொண்டிருக்கும் உடன்படிக்கை பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவில்லை. அரசு கடன்பேண்தகு தன்மை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தக்கூடாது. வர்த்தகத்தின் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.” – என்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை அரசும் சர்வதேச நாணய நிதியமும் 2029ஆம் ஆண்டில் 3.1 பொருளாதார வளர்ச்சி என்பதையே பொதுக்கொள்கையாகக் கொண்டுள்ளன. இது போதுமானதல்ல. 2029ஆம் ஆண்டுக்கான உலகில் 3.1 வீத பொருளாதார வளர்ச்சி உண்மையில் மந்த நிலையே. ஆதலால், ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றியமைக்கும்.” – என்றும் சஜித் பிரசாரக் கூட்டமொன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here