தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டிய மாநகர சபைக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் போலியான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.இது தொடர்பான செயல்முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.
இது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் சதி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.