பதுளை, பசறை பிரதான வீதியில் இரு வேறு இடங்களில் வீதி விபத்துகள்

0
76
பதுளை, பசறை பிரதான வீதியில் இரு வேறு இடங்களில் வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

பதுளை பசறை வீதியில் 10ஆம் கட்டைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போது லொறியில் சாரதி மாத்திரமே பயணித்த தாகவும் இருப்பினும் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பசறை பதுளை வீதியில் 5 ம் கட்டைப் பகுதியில் பசறை பக்கம் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கடவையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

May be an image of 3 people
குறித்த இரு சம்பவங்களும் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here