பாடசாலை மாணவி வன்புணர்வு- அதே பாடசாலை மாணவன் கைது

0
77

பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தணமல்வில காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here