நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழமையான பணிகள் நடைபெறாமல் மூடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.