பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

0
41

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,அரச துறையிலும் தனியார் துறையிலும் பணிபுரிபவர்களுக்கு, தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த விடுமுறை இழப்பின்றி வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட, ஊடக அறிவித்தல் மீது மீண்டும் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு செயலாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அதற்கமைய அரச பல்கலைக்கழகங்களின் கீழ் அடங்காத தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவகங்களும் தமது பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு செயலாற்றுமாறு இத்தால் வேண்டிக்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here