லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

0
100

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் (Niroshan J Pieries) தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், இறுதியாக கடந்த ஜூலை மூன்றாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here