டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில், குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ள சம்பவம் புதன்கிழமை (10 ) பதிவாகியுள்ளது.
மூன்று பிள்ளையின் தாயொருவரே (26 வயது) இவ்வாறு கணவனின் (33வயது) தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவன் மனைவி இடையே செவ்வாய்க்கிழமை (08) மாலைஏற்பட்ட தகராறின் பின்னர் தொழிலுக்காக கொழும்பு செல்வதாக கூறிய மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்று அன்றிரவு தங்கியுள்ளார்.
எனினும் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதிலிருந்து புதன்கிழமை(09) காலை வரை மனைவியிடம் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வராத காரணத்தால் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் திடீரென அதே பகுதியை சேர்ந்த முன்னாள் காதலன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது காதலன் தொழிலுக்குச் சென்ற நிலையில் மனைவி அவரது வீட்டில் இருந்ததை அவதானித்த கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.