தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகமான கருத்துக்கள் வெளியாகின.
இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு்ளளது.ஜனாதிபதி இந்த நாட்களில் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு குண்டு துளைக்காத வாகனத்தையே பயன்படுத்தவதாக தெரியவந்துள்ளது.
எனினும் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட வாகனத்திற்கான எரிபொருள் செலவினை யார் ஏற்பது என்பது தொடர்பில் பல தரப்பினரால் கருத்து வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் போது அரச வாகனங்களுக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் (NPP) பணத்தின் மூலம் எரிபொருள் நிரப்புவதாகவும், மக்களின் வரிப்பணம் இதற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.