கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 07.11.2024 ந் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளதாக பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.
குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் மேலும் தெரிவித்தார்.இதன் மூலம் ஏற்படும் தடங்களுக்கு பாவனையாளர்களுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.