நுவரெலியா மாவட்டத்தில் வாக்கு சிதறப்போகிறது ஆகவே மக்கள் சிந்தித்;து வாக்களிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்கள் அவர்களையே பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும் இன்றும் மலையக மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள். இவர்கள் உண்மையாக மலையக மக்களுக்;கு போதியளவு சேவையினை பெற்றுக்கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் வாக்கு ஏன் சிதறப்போகிறது என சுயேட்சைக்குழு வேட்பாளரும் சட்டதரணியுமான காளிமுத்து திருச்செல்வம் கேள்வி எழுப்பினார்.
நேற்று இரவு 04 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் வெளிஓயா தோட்டத்தில் 05 இலக்க லயத்தில் பிறந்து பல துன்பங்களுக்;கு மத்தியில் கல்வி கற்று சட்டத்தரணியாக இருந்து வருகின்றேன் இந்த தேர்தலில் பல கற்றவர்கள் சொன்னார்கள் என்;னை தேர்தலில் நிற்குமாறு அதனால் தான் நான் இந்த தேர்தலில் களமிரங்கியிருக்கிறேன்.
அதற்கு பிரதான காரணம் மலையக மக்கள் விடிவுக்காக பாராளுமன்றத்தில் கற்றறிந்த மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மலையக மக்களின் வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்த எமது சமூகத்திலிருந்து செல்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் என்பதாலும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் நான் பிறந்த வெளிஓயா ஐந்து இலக்க லயத்தின் கூரைத்தகரம் 200 வருடங்களுக்கு முன் போடப்பட்டது அது கூட இன்னும் மாற்றப்படவில்லை அது மாத்திரமன்றி குடிநீர் இல்லை மலையக பாதைகளில் இன்றும் செல்ல முடியாது ஒழுங்கான சுகாதார வசதிகள்,போக்குவரத்து வசதிகள் கல்வித்தேவைகள்,உள்ளிட்ட அடிபடை வசதிகள் எதுவுமே இன்றுள்ள அரசியல் தலைவர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
காலம் காலமாக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சுகபோக வாழ்க்கையினை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்களே தவிர மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை நான் அரசியலுக்கு வர முன்னமே என்னால் முடிந்தளவு கல்வி சுகாதாரம்,ரீதியான பல சமூக சேவைகளை முன்னெடுத்துள்ளேன்.
எனது ஒரே நோக்கம் எமது மக்கள் ஏனைய சமூகம் போல் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நான் அரசியலில் இறங்கியிருக்கிறேனே தவிர இந்த அரசியலை வைத்து சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அல்ல எனவே ரேடியோ சின்னத்தில் சுயேட்சை குழு நாலில் போட்டியிடும் என்னை மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்