நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்: வாக்களிக்காதோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா!

0
107

2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பத்தாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடந்த 14 ஆம் திகதி வாக்களிப்பு நாடளாவிய 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 11,148,006 பேர் வாக்களித்துள்ளனர்.இதற்கமைய, இம்முறை நாடளாவிய ரீதியில் 65 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 667,640 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 11,815,246 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கமைய வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 13,319,616 பேர் வாக்களித்திருந்தனர்.3,820,738 பேர் வாக்களிக்கவில்லை.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, 13,619,916 செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here