வேலைநிறுத்தத்தில் குதித்த ருஹுனு பல்கலைக்கழக ஆசிரியர்கள்

0
67

ருஹுனு பல்கலைக்கழகத்தின் (University of Ruhuna) கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (19) காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தற்போது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here