அரச கடன் முகாமைத்துவ சட்டம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறித்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் நேற்றையதினம் (24) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி, அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தில் அரசாங்கம் சார்பில் கடன் பெறுதல், கடன் வழங்குதல் மற்றும் பொதுக்கடன் வழங்குதல், கடன் முகாமைத்துவ அலுவலகம் அமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.