இலங்கையில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – 22 மரணங்கள் பதிவு

0
66

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2,655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் 45,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,

அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,999 நோயாளர்களும்,

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,791 நோயாளர்களும்,

சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,521 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here